திண்டுக்கல்லில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் சக்கரபாணி
திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டியில் ₹3,95 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக17:2:24 அன்று திறந்து வைத்தார் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள், அதனைத் தொடர்ந்து புதிய அலுவலகத்தை உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.சக்கரபாணி அவர்கள் இன்று25:2:24 குத்துவிளக்கு ஏற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார் இந்நிகழ்வில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.பூங்கொடி தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திருமதி சத்திய புவனா ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment