பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகம் அவதூறு செய்திக்கு மறுப்பு
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக பஞ்சாமிர்தம், லட்டு, முறுக்கு, அதிரசம், சக்கரைப்பொங்கல், புளியோதரை, தேன், தினைமாவு நல்ல தரமான முறையில் தயார் செய்து பக்தர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினந்தோறும் பக்தர்களின் வருகையை உத்தேசமாக கணித்து இப்பிரசாதப்பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. 2024ம் ஆண்டு தைப்பூசத்திருவிழாவின்போது தட்டுப்பாடின்றி பிரசாதப்பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று நியூஸ் பத்திரிக்கை மற்றும் ஒரு தொலைக்காட்சியில் திருக்கோயில் மூலம் காலவாதியான பிரசாதங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும்உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த பக்தர்கள் கோரிக்கை விடுப்பதாகவும் செய்தி வெளியிடப்பட்டது.
திருக்கோயில் நிர்வாகம் மூலம் காலாவதியான பொருட்கள் எதுவும் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படவில்லை. விற்பனையை தேக்குவதற்காகவும், திருக்கோயிலின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடனும் மேற்கண்டவாறு தவறான செய்திகளை உள்நோக்கத்துடன் பரப்பிவருகின்றனர். இச்செய்தியை அடுத்து உணவு பாதுகாப்புத்துறையினருக்கு திருக்கோயில் பிரசாதங்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு திருக்கோயில் நிர்வாகம் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத்துறை அறிக்கை பெறப்பட்டவுடன் பொய்யான தகவல்களை பரப்பிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment