திண்டுக்கல்லில் பள்ளிவாசல் மேம்பாட்டுப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு ஆணைகள் அமைச்சர்கள் சக்கரபாணி செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் வழங்கினர்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள், மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் ஆகியோர் திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் ஒரியண்டல் அமிருன்நிஷா உயர்நிலைப்பள்ளியில் இன்று(09.02.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பள்ளிவாசல் மேம்பாட்டுப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினர். அருகில் திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் திரு ராசப்பா உட்பட பலர் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment