தமிழக அரசு வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் நாளை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்
திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக நாளை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல் அம்மையநாயக்கனூர் அருகே ஜல்லிப்பட்டி பகுதியில் திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் உறுப்பினர் வழக்கறிஞர் முத்துராமலிங்கம் என்பவர் வீட்டில் வெடிபொருட்கள் வீசியவர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்து நாளை (திங்கட்கிழமை) ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment