திண்டுக்கல்லில் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்த பரிதாபம்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் ராஜா என்பவர் இன்று தனது மொபைலில் உள்ள இணையதளத்தின் மூலமாக வேலை செய்து கொண்டிருந்த போது மத்திய அரசு உங்கள் கணக்கில் ரூபாய் 5000 பணம் அனுப்பி உள்ளது என்று பிரதமரின் படத்தை போட்டு வந்த செயலியை(link)கை ராஜா திறந்து பார்த்துள்ளார் சிறிது நேரத்தில் தனது வங்கிக் கணக்கில் இருந்த 1999 ரூபாயும் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி அவர் போனுக்கு வந்துள்ளது இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜா காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார், மேலும் இது போன்ற தேவையில்லாத குறுஞ்செய்தி எதும் வந்தால் உடனே அதைப் பிரித்துப் பார்ப்பது லிங்குகளை அனுமதிப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment