வேலக்கவுண்டன்பட்டியில் மற்றும் ஜெ.புதுக்கோட்டையில் புதியதாக கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைச்சர் இ. பெரியசாமி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் சீவல்சரகு ஊராட்சி ஜெ.புதுக்கோட்டையில் புதியதாக கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இன்று(02.02.2024) பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். அருகில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திரு.மு.பாஸ்கரன், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி மு.மகேஸ்வரி முருகேசன் உட்பட பலர் உள்ளனர்.
இதே போல் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் சீவல்சரகு ஊராட்சி வேலக்கவுண்டன்பட்டியில் புதியதாக கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியையும் இன்று(02.02.2024) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அருகில் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி மு.மகேஸ்வரி முருகேசன் உட்பட பலர் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment