திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு காணொளி ஒளிபரப்பு - சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாகியுள்ளது
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல்நிலையம் கட்டிடத்தின் மேல் தளத்தில் LED திரை அமைக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு காணொளி காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.தற்போது திமுக ஆண்டு வரும் நிலையில் இதைக்கண்ட பொதுமக்கள் பலர் தங்களது செல்போனில் அந்த காட்சிகளை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment