கொடைரோடு அருகே தண்டவாளத்தில் சிமெண்ட் கற்கள் வைக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரிக்க இணைய குற்றப்பிரிவு போலீசாருக்கு இரயில்வே பரிந்துரை - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 21 February 2024

கொடைரோடு அருகே தண்டவாளத்தில் சிமெண்ட் கற்கள் வைக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரிக்க இணைய குற்றப்பிரிவு போலீசாருக்கு இரயில்வே பரிந்துரை


கொடைரோடு அருகே தண்டவாளத்தில் சிமெண்ட் கற்கள் வைக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரிக்க இணைய குற்றப்பிரிவு போலீசாருக்கு இரயில்வே பரிந்துரை



கடந்த 11ஆம் தேதி இரவு நாகர்கோவிலில் இருந்து சென்னை தாம்பரம் வரை இயக்கப்படும் அந்தியோதா விரைவு இரயில் 



திண்டுக்கல் நோக்கி வந்த போது கொடைரோடு அருகே தண்டவாளத்தில் சிமெண்ட் கற்கள் கிடந்தன. இதனால் ரயிலை நிறுத்திய ஓட்டுனர் அந்த கற்களை அப்புறப்படுத்திவிட்டு மீண்டும் இரயிலை இயக்கினார். இது குறித்து இரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி இரவு இரயில் தண்டவாளம் அருகே சுற்றித்திரிந்தவர்கள் பயன்படுத்திய செல்போன் சிம் கார்டுகளை வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டுக்கல் இணைய குற்றப்பிரிவு போலீசாரிடம் இரயில்வே காவல்துறையினர் பரிந்துரை செய்தனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad