திண்டுக்கல்லில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என அரசியல் கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி.ஆனந்த் அறிவுறுத்தலின் பேரில் திண்டுக்கல் மேற்கு மாநகர தலைமை சார்பாக பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.இதில் அரிசி,குடம், மற்றும் சேலை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தளபதி விஜய் பயிலகத்தில் பயிலும் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதற்கு திண்டுக்கல் மேற்கு மாநகர தலைவர் சையது அசாருதீன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் தர்மா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மாநகர நிர்வாகிகள் அண்ணாத்துரை, ஆனந்து, இன்பென்ட் கவுதம், ரகுமணிகண்டன், காளீஸ்வரன் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக திண்டுக்கல் மேற்கு மாநகர செயலாளர் சத்தீஸ்குமார் நன்றி கூறினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment