திண்டுக்கல் பொன்னுமாந்துறை புதுப்பட்டி சின்னகுளம் அருகே வாலிபர் சப்பை கோபால் என்ற ராஜகோபால் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உட்பட 4 பேர் கைது
திண்டுக்கல் அருகே பொன்னுமாந்துறை புதுப்பட்டி சின்னகுளம் அருகே ராஜகோபால் (எ) சப்பை கோபால் என்பவர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட எஸ்.பி.பிரதீப் உத்தரவின் பேரில் புறநகர் டிஎஸ்பி உதயகுமார் மேற்பார்வையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் அருண்நாராயணன், பாலசுப்பிரமணியன் தனிப்பிரிவு காவலர்கள் வினோத், கார்த்திக் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படையினர் சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட சரவணகுமார், காடு (எ) அன்பழகன், ஜெயகிருஷ்ணகண்ணன் மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 4 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு அவர்கள் பயன்படுத்திய கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றி சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment