புதுச்சத்திரம் கிராமத்தில் விவசாயிகளுக்கு ஈநாம் பயிற்சி அட்மா திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டது
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் வட்டாரம் அட்மா திட்டத்தின் மூலம் புதுச்சத்திரம் கிராமத்தில் விவசாயிகளுக்கு இநாம் பயிற்சி நடத்தப்பட்டது . இந் நிகழ்ச்சி வேளாண்மை உதவி இயக்குநர் சந்திரமோகன் அவர்கள் ஆலோசனைபடி டி. புதுப்பட்டி தலைவர் அருணாசலம் அவர்கள் முன்னிலையில் எம். எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாக்டர் மணிகண்டன் அவர்கள் பருவத்திற்கு ஏற்ப பயிர் செய்து பராமரிப்பு செய்வது பற்றி கூறினார். மற்றும் மக்காச் சோள படைப்புழு தாக்குதலை சரி செய்ய இனக்கவர்ச்சி பொறி வைத்து கட்டுப்படுத்தலாம் என கூறினார். மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் செயல் அலுவலர் நவீன் அவர்கள் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை குடோனில் சேமித்து வைத்து பின் விற்பனை செய்யலாம் மற்றும் குறைந்த வாடகை எனவும் முதல் 15 நாட்கள் கட்டனம் இல்லாமல் வைத்து கொள்ளலாம் எனவும் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் வேளாண் வணிகம் உதவி வேளாண்மை அலுவலர் மூர்த்தி அவர்கள் விவசாயிகள் தங்களது பொருட்களை பதப்படுத்தும் நிலையத்தினை பயன் படுத்தி நல்ல விலை வரும் போது பொருட்களை விற்பனை செய்து பயன் பெறலாம் என கூறினார். இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகன்யா உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பொன் தமிழரசு மற்றும் அருண்குமார் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment