கோல்டன் ஹவர்ஸ்'திட்டத்தை பயன்படுத்தி விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றினால் ரூ.10 ஆயிரத்தடன் ரிவார்டுகளை பெற்றுகொள்ள திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் வேண்டுகோள் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday, 10 February 2024

கோல்டன் ஹவர்ஸ்'திட்டத்தை பயன்படுத்தி விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றினால் ரூ.10 ஆயிரத்தடன் ரிவார்டுகளை பெற்றுகொள்ள திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் வேண்டுகோள்

 


கோல்டன் ஹவர்ஸ்'திட்டத்தை பயன்படுத்தி விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றினால் ரூ.10 ஆயிரத்தடன்  ரிவார்டுகளை பெற்றுகொள்ள திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் வேண்டுகோள்



திண்டுக்கல் மாவட்டத்தில் வாகன பயன்பாடுகள் அதிகமாக இருப்பதால் விபத்துக்களும் அதிகளவில் நடக்கின்றன. விபத்துகள் நடக்கும் நேரங்களில் அதை பார்ப்பவர்களில் சிலர் உதவி செய்கின்றனர். சிலர் போலீஸ் கேஸ் வந்து விடுமோ என்ற எண்ணத்தில் அந்த இடத்தை விட்டு கடந்து செல்கின்றனர். இதனால் உதவி செய்ய ஆள் இல்லாமல் பலர் விபத்துக்களில் சிக்கி இறக்கும் நிலை ஏற்படுகிறது.



விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றுவதற்காக கோல்டன் ஹவர்ஸ்' எனும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. விபத்தில் யாராவது சிக்கியிருந்தால் அருகிலிருப்பவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவமனைக்கு கொண்டு வந்தால் ரிவார்டாக ரூ.10 ஆயிரம் வரை இத்திட்டத்தில் வழங்கப்படுகிறது. இதை பொது மக்கள் பயன்படுத்தினால் விபத்தில் சிக்கியவரின் உயிரும் காப்பாற்றப்படும். தங்களுக்கும் பரிசு கிடைக்கும் என போக்கவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad