திண்டுக்கல்லில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்தியது
திண்டுக்கல் நாகல் நகர் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக மத்திய அரசை கண்டித்து மாவட்டத் தலைவர் ஷேக்பரி தலைமையில் மாவட்ட செயலாளர் அமீன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத வழிபாட்டு தலங்களை பாதுகாக்க கோரியும், மத வழிபாட்டு உரிமையை பறிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்தும், பாபர் மசூதி விவகாரத்தை முடித்துவிட்டு ஞானவபி, காசி, மதுரா போன்ற மசூதியில் இன்னும் பல மசூதிகளை அபகரிக்கும் செயலை ஊக்குவிக்கும் வகையில் செயல்படும் மத்திய பாஜக அரசு கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment