தண்டவாள பகுதிகளில் கற்கள் வைப்பது ரயில்கள் வரும்போது கற்களை எறிவது சட்டப்படி குற்றம் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் விழிப்புணர்வு பிரச்சாரம்
திண்டுக்கல் தாமரைப்பாடி ரயில் நிலையம் அருகே விபத்து அதிகமாக நடைபெறும் இடத்தில் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில் விபத்து குறித்த விழிப்புணர்வு பிரச்சார புகைப்பட பலகை வைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் தண்டவாள பகுதிகளில் கற்கள் வைப்பது ரயில்கள் வரும்போது கற்களை எறிவது சட்டப்படி குற்றம் என்பதை வலியுறுத்தியும் அந்த செய்கையில் ஈடுபடும் நபர்களை கண்டால் உடனே ரயில்வே உதவி 1512 அழைக்க வலியுறுத்தியும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment