உடைந்த பீர் பாட்டிலை காட்டி கொள்ளை மொட்டணம்பட்டி ரவுடி கைது
நிலக்கோட்டை பூ வியாபாரி சேசுராஜ் என்பவர் பூ வாங்குவதற்கு திண்டுக்கல் மொட்டணம்பட்டி இரயில்வே கேட் அருகே நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த மொட்டணம்பட்டியை சேர்ந்த விக்னேஷ் என்ற விக்னு என்பவர் தான் பெரிய ரவுடி என்றுகூறி உடைந்த பீர் பாட்டிலை காட்டி உயிர் பயம் காட்டி மிரட்டி சேசுராஜ் வைத்திருந்த 500 ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்து விரட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட சேசுராஜ் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே தாலுகா காவல் ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் விக்னேஷ் என்ற விக்னுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment