திண்டுக்கலில் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்
திண்டுக்கல் வருவாய்த்துறை கோட்டாட்சியர் அலுவலக வாயில் முன்புறம் வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட துணை தலைவர் விஜயராகவன் தலைமையிலும் வட்ட பொறுப்பாளர்கள் வேல்முருகன், ஜமுனாராணி ஆகியோர் முன்னிலையில் வருவாய் துறை அலுவலகங்களில் பணியிறக்கம், பெயர் மாற்றம், விதி திருத்தம், அலுவலக உதவியாளர் காலியிடம் நிரப்புதல் உள்ளிட்ட வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கிருஷ்ணவேணி, காளீஸ்வரி, உமா மகேஸ்வரி, வெண்ணிலா, சுகன்யா, வீரமாதேவி, கதிரேசன் ஜீவா உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment