மலைதேனீக்கள் கொட்டியதில் விவசாயி பரிதாப பலி
திண்டுக்கல் மாவட்டம் மா.மு.கோவிலூர் அருகே பள்ளி கட்டிடத்தில் இருந்த தேன்கூடு கலைந்ததில் அதிலிருந்து வெளியேறிய மலைத்தேனீக்கள் அப்பகுதியில் இருந்தவர்களை கொட்டியதில் விவசாயி காளியப்பன் என்ற முதியவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் , மேலும் மலைத்தேனீக்கல் கொட்டியதில் சிலர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை அப்பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர், மேலும் இச்சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், மலை தேனீக்கள் கொட்டியதில் விவசாயி இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment