வேடசந்தூரில் பத்திரிக்கையாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய வனத்துறை
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் செய்தியாளர் சீனிவாசன் மீது திண்டுக்கல் வனத்துறையினர் (ஸ்குவாட்) கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டு அவரின் செல்போனை பறித்து செல்போன் முழுவதையும் அழித்து செல்போனை தூக்கி எரிந்து சென்றனர்.
படுகாயம் அடைந்த சீனிவாசன் சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வேடசந்தூரில் வனத்துறையினரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தினத்தந்தி செய்தியாளர் சீனிவாசனிடம் வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment