திண்டுக்கல்லில் உலக்கையால் அடித்து பெண் கொலை :
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சடையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்து வெள்ளையன் இவரது மனைவி தமிழரசி (45) இவருக்கும் அண்டை வீட்டில் வசித்து வரும் கருப்பையாவுக்கும்( 35) இடையே வீட்டின் அருகே கழிவுநீர் சாக்கடை சம்மந்தமான பிரச்சனை இருந்து வந்துள்ள நிலையில் நேற்று மீண்டும் கருப்பையா தமிழரசி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது ஒரு கட்டத்தில் வாய் தகராறு கைகளப்பாக மாறியதாக கூறப்படுகிறது. ஆத்திரம் அடைந்த கருப்பையா தன் வீட்டில் இருந்த உலக்கையை எடுத்து தமிழரசியை தாக்கியதால் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது,இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment