பொதுமக்களிடமிருந்து 254 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள, மாவட்ட ஆட்சித்தலைவர், அறிவுறுத்தினார். இன்றைய கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு தலா ரூ.13,349 மதிப்பிலான திறன்பேசி மொத்தம் ரூ.2.60 இலட்சம் மதிப்பீட்டிலும், 2 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள், 2 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மு.ராணி, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) கங்காகௌரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment