திண்டுக்கல்லில் உள்ள தபால் நிலையங்களில் நாளை தங்க பத்திரம் விற்பனை தொடக்கம்
திண்டுக்கல் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை நாளை தொடங்குகிறது. இந்திய அஞ்சல் துறை, ரிசர்வ் வங்கியுடன் இணைந்து குறிப்பிட்ட தேதிகளில் தங்க பத்திரம் விற்பனை செய்து வருகிறது. இந்த மாதத்திற்கான தங்க பத்திரம் விற்பனை நாளை துவங்கி வரும் 16ம் தேதி வரை நடக்கிறது. ஒரு கிராம் தங்க பத்திரத்தின் விலை ரூ.6263. இதன்மூலம் ஒருவர் 1 கிராம் முதல் 4 கிலோ வரை தங்க பத்திரங்களை வாங்கி கொள்ளலாம். தங்க பத்திரத்தின் முதலீட்டு காலமான 8 ஆண்டுகளின் இறுதியில் அன்றைய தேதியில் உள்ள மதிப்பில் தங்க பத்திரங்களை பணமாக மாற்றி கொள்ளலாம். இதன் மூலம் செய்யப்படும் முதலீட்டுக்கு ரிசர்வ் வங்கியின் மூலமாக 2.5 சதவீதம் வட்டி கணக்கிடப்பட்டு 6 மாதங்களுக்கு ஒரு முறை முதலீட்டாளர்களுக்கு வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment