நிலக்கோட்டை பஸ் நிலையம் அருகே அதிமுக ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday, 1 February 2024

நிலக்கோட்டை பஸ் நிலையம் அருகே அதிமுக ஆர்ப்பாட்டம்.


பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மகன் வீட்டில் பணியாற்றிய பட்டியலின பணிப்பெண் மீது வன்கொடுமையை ஏவிவிட்டு கொடுபாதக செயலை செய்துள்ள பல்லாவரம் தி.மு.க. எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய  திமுக அரசைக்கண்டித்து அதிமுக துணைப் பொதுச்செயலாளர், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர், முன்னாள்  அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன்  தலைமையில் புரட்சித்தலைவி அம்மா பேரவை இணைச் செயளாளர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத் தலைவர், நத்தம் ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், மாவட்ட இணை செயலாளர், நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்   தேன்மொழி சேகர் நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன், ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் நிலக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர்  எம்.கே. நல்ல தம்பி, நிலக்கோட்டை பேரூர் செயலாளர சேகர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பாலசுப்ரமணியம், ஆகியோர் முன்னிலையில் நிலக்கோட்டை - பேருந்து நிலையம் அருகில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, அதில் அதிமுகவினர், தமிழக அரசைக் கண்டித்து கோஷமிட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad