திண்டுக்கல்லில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 5 பேர் கைது கத்தி,உருட்டு கட்டைகள் பறிமுதல்
திண்டுக்கல் அருகே முள்ளிப்பாடி சந்தனவர்த்தினி ஆறு பகுதியில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், சப்-இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தனவர்த்தினி ஆற்றுப் பாலத்தில் 5 பேர் கொண்ட கும்பல் சந்தேகப்படும்படியாக அமர்ந்திருந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசா ரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அவர்களை சோதனை செய்தபோது கத்தி, உருட்டு கட்டைகள் இருந்தது. மேலும் இந்த ஆயுதங்களை வைத்து கொள்ளையடிக்கதிட்ட மிட்டு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பெரிய பள்ளப்பட்டி தெற்குதெருவை சேர்ந்த ரஞ்சித் (வயது 22), சீலப்பாடி குழந்தைபட்டியை சேர்ந்த யோகேஷ் (24), வேடசந்தூர் மலவார்பட்டியை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (30), அம்மையப்பன் (36), முள்ளிப்பாடி குழிப்பட்டியைச் சேர்ந்த விஜய் (22) ஆகிய 5 பேரை போலீ சார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 கத்தி, 3 உருட்டு கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment