"403"இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்து உள்ளதாக அமைச்சர் அறிவிப்பு:
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் சுமார் ஐந்து ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு படிக்கச் செல்லும் மாணவர்களில் (403 மாணவர்கள்) உயிரிழந்து உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார் அதிகபட்சமாக கனடாவில் 91 மாணவர்களும், பிரிட்டன் 48,ரஷ்யா 40, அமெரிக்கா 36, ஆஸ்திரேலியா 35, ஆகிய நாடுகளில் மொத்தம் 403 மாணவர்கள் உயிரிழந்து உள்ளதாக தெரிவித்துள்ளார்,மேலும் மாணவர்களின் நலனுக்காக அரசு முக்கியத்துவம் அளித்து வருவதோடு அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்வு காண தூதரகம் முக்கியத்துவம் அளித்து வருவதாக தெரிவித்துள்ளார்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment