வேடசந்தூர் அருகே தடையை மீறி முயல் வேட்டை 26 பேருக்கு ரூ.52 ஆயிரம் அபராதம் வனத்துறையினர் நடவடிக்கை
திண்டுக்கல் வேடசந்தூரை அடுத்த அருகே புனித பெரிய அந்தோனியார் ஆலயத் திருவிழா கடந்த 17,18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. திருவிழா முடிவடைந்து 2 வாரங்களுக்கு பிறகு வரும் சனிக்கிழமையில் கிராம மக்கள் ஒன்றிணைந்து அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு முயல் வேட்டைக்கு செல்வது வழக்கம் இந்த நடைமுறை சுமார் 200 ஆண்டுகளாக பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வந்தது.
இந்நிலையில் சனிக்கிழமை முயல் வேட்டைக்கு மாரம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பலர் சென்றனர். அப்போது வேட்டையில் ஈடுபட்ட மாரம்பாடியை சேர்ந்த வேளாங்கண்ணி, ஆரோக்கியதாஸ், ஞானம்,அந்தோணி உள்ளிட்ட 26 பேரை பிடித்து தலா ரூ.2000 வீதம் ரூ.52 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
மேலும் இனி வன உயிரினங்களை வேட்டையாட மாட்டோம் என உறுதி அளித்த பிறகு 26 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment