கொசவபட்டி ஜல்லிகட்டு காளைகள் முட்டியதில் 25 பேர் படுகாயம் ஓ.பி.எஸ், விஜயபாஸ்கர் மாடுகள் பரிசை தட்டிச்சென்றன
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே கொசவபட்டியில் புனித அந்தோணியார் திரு விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நாடபெற்றது. தேனி, மதுரை, விருதுநகர் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து 704 காளைகள் ஆன்லைனில் பதிவு செய்து குவிந்தனர். பார்த்த பார்வையாளாகள் கைதட்டி ஆரவாரம் செய்து ஜல்லிக்கட்டை ரசித்தனர்.
கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்து ஜல்லிக்கட்டில் பக்கேற்க அனுமதி வழங்கினர். ஓ.பி.எஸ், விஜயபாஸ்கர் மாடுகள் பரிசை தட்டிச்சென்றன.உள்ளூர் மற்றும் வெளியூர் காளைகளும், கலந்து கொண்டு பரிசை ஒவ்வொன்றாக தட்டிச் சென்றன. மேலும் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகளை அடக்க வீரர்கள் சீறிப்பாய்ந்தனர்.
காளைகளும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றன. ஜல்லிக்கட்டுபோட்டியில் மாடுபிடி வீரரான பாலமேட்டை சேர்ந்த முருகானந்தம் (வயது 22). மற்றும் ஆரோக்கியசாமி (60)விஜய் (21). பிரான்சிஸ் (26), விஜய் செபாஸ்டியன் ஆகியோர் படுகாயமடைந்து மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைகட்டனர்.
புறநகர் போலிஸ் துணை குப்பிரண்டு உதயகுமார், இன்ஸ்பெகடர் தங்கமுனிய சாமி,ரமேஷ் குமார், சப்- இன்ஸ்பெக்டர் சிவராஜ் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வெற்றி பெற்ற வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் அண்டா,குடம்,சைக்கிள், குத்துவிளக்கு,வயர் கட்டில், குக்கர் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன . ஜல்லிக்கட்டு போட்டியை காண பல்வேறு பகுதிகளில் ஆபிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர். ஏற்பாடுகளை ஊர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment