200 கிராம் பஞ்சாமிர்தம் உற்பத்தி மற்றும் விற்பனை மனநல காப்பகம் மற்றும் தற்காலிக முதலுதவி சிகிச்சை மையம் அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான கட்டிடத்தை ரூ.67.95 லட்சத்தில், கூடுதல் வசதிகளுடன் கூடிய மனநல காப்பகமாக அமைச்சர் சக்கரபாணி துவங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து ரூ.25.59 லட்சத்தில் மலைக்கோயிலுக்கு செல்லும் யானைப் பாதையில் இடும்பன் கோயில் அருகிலுள்ள தற்காலிக முதலுதவி சிகிச்சை மையத்தை அகற்றி நிரந்தர கட்டிடமாக துவக்கி வைத்தும்,
திருக்கோயிலில் 200 கிராம் பஞ்சாமிர்தம் உற்பத்தி மற்றும் விற்பனையையும் புதிதாக துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வின்போது திருக்கோயில் உதவி ஆணையர் உள்ளிட்ட அறநிலையத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment