வத்தலக்குண்டு பகுதியில் டவுசர் கொள்ளையர்கள் அட்டகாசம் 2 வீடுகளில் திருட முயற்சி பொதுமக்கள் அச்சம்
வத்தலகுண்டு அருகே பெண்ணிடம் 6 பவுன் தங்கச் செயின் பறிப்பு 2 வீடுகளில் திருட முயற்சி
திண்டுக்கல் வத்தலகுண்டு அருகே உள்ள கீழக்கோவில்பட்டியில் அதிகாலை 1 மணி அளவில் நடராஜன் மனைவி நித்தியகல்யாணி என்பவர் வீடு அருகே உள்ள கழிவறைக்கு சென்றார். அப்போது மேல்சட்டை அணியாமல் வந்த டவுசர் கொள்ளையர்கள் 2 பேர் நித்திய கல்யாணி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். இதை அடுத்து ராமகிருஷ்ணன் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து திருட முயன்றனர். அதில் எதுவும் இல்லாததால் அதே பகுதியில் உள்ள ஜெயராமன் என்பவரின் வீட்டின் கதவை தள்ளி உள்ளே செல்ல முயன்றனர். அப்போது வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டதால் அந்தப் பகுதியில் தயாராக நிறுத்தி வைத்திருந்த ஆட்டோவில் ஏறி தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து வத்தலகுண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment