விட்டல் நாயக்கன்பட்டி அருகே 2 கார்கள் மோதி விபத்து 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
திண்டுக்கல் எரியோடு தண்ணீர் பந்தம் பட்டியைச் சேர்ந்த அண்ணாதுரை(50), காரில் வேடசந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். திண்டுக்கல் அடுத்த தாடிக்கொம்பு, விட்டல் நாயக்கன்பட்டி அருகே சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென கார் பறந்து சாலை தடுப்பை தாண்டி எதிர் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது வேகமாக மோதியது. இதில் சேலத்தில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த ராஜ்குமார், பிரியா, தாமரை, முத்து, சத்திய கோகிலா, ராஜ்குமார் மற்றும் அண்ணாதுரை ஆகியோர் காயம் அடைந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment