திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் 14 இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து உத்தரவு
பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியில் உள்ள அரசு அதிகாரிகள், காவல்துறையினரை இடம் மாற்றம் செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி பலர் இட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன் வரிசையில் திண்டுக்கல், தேனி மாவட்டத்தை சேர்ந்த 14 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வடமதுரை போலீஸ் நிலையத்திற்கும், வடமதுரை இன்ஸ்பெக்டர் பார்த்திபன் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கூடலூர் இன்ஸ்பெக்டர்
பிச்சை பாண்டியன் தேனி சைபர் கிரைம் பிரிவுக்கும், தேனி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் நாகராணி ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசுக்கும், ஆண்டிபட்டி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் வனிதாமணி கூடலூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு ராஜதானி இன்ஸ்பெக்டர் செல்வி பழனி அனைத்து மகளிர் போலீசுக்கும், பழனி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் கண்மணி அல்லிநகரம் போலீசுக்கும், தாண்டிக்குடி இன்ஸ்பெக்ட ண்டி பாலாண்டி சின்னமனூர் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சின்னமனூர் இன்ஸ்பெ க்டர் லோகநாதன் திண்டு க்கல் வி.ஆர்.ரேஞ்ச் பிரிவிற்கும், உத்தமபாளையம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ஜாக்குலின் ஓட்டன்சத்திரம் அனைத்து மகளிர் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டு ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் விமலா உத்தமபாளையம் அனைத்து மகளிர் நிலையத்திற்கும், அல்லிநகரம் இன்ஸ்பெக்டர் கண்ணன் ராஜதானிக்கும், போடி டிராபிக் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் ஓட்டன்சத்திரம் டிராபிக் நிலையத்திற்கும், ஓட்டன்சத்திரம் டிராபிக் இன்ஸ்பெக்டர் பஞ்ச வர்ணம் போடிக்கும் இட மாற்றம் செய்யப்பட்டு ள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment