சொத்துவரி நிலுவை வரிபாக்கி செலுத்தாத 11 கடைகளை சீல் வைத்து அதிரடி நடவடிக்கை
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட வர்த்தக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகள் மீது சொத்துவரி நிலுவை இருந்து வருகிறது. இதனால் மாநகராட்சியில் திட்ட பணிகள் செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பெயரில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி உதவி வருவாய் அலுவலர் முத்துக்குமார், வருவாய் ஆய்வாளர் நாகராஜன் மற்றும் குழுவினர் பள்ளிவாசல் தெரு மற்றும் பெரிய கடை வீதியில் வரிபாக்கி செலுத்தாத 11 கடைகளை சீல் வைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment