குழந்தை பக்தர்களுக்கு QR CODE பொருத்தப்பட்ட ஸ்டிக்கர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒட்டினார்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தை மாத திருவிழா அதி விமரிசையாக நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் நவீன பாதுகாப்பு யுக்தியாக குழந்தை பக்தர்களுக்கு QR code ஸ்டிக்கர்கள் ஒட்டும் நடைமுறை அமல்படுத்தப் பட்டுள்ளது. இந்நிலையில் பழனி தேவர் சிலை அருகே குழந்தை பக்தர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்கள் QR CODE பொருத்தப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டினார்.குழந்தைகள் காணாமல் போனால் விரைவாக கண்டுபிடிப்பதற்கு இது ஏதுவாக இருக்கும்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment