வாக்காளர் விழிப்புணர்வு பேரணி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் தொடங்கி வைத்தார்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, மாணவ, மாணவிகள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.நா.சரவணன் இன்று (24.01.2024) தொடங்கி வைத்தார். அருகில் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.கமலக்கண்ணன், வட்டாட்சியர்கள் திரு.செழியன், திரு.வில்சன் தேவதாஸ், தனி வட்டாட்சியர்(தேர்தல்) திரு.சரவணன், நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.சரண் கோபால் உட்பட பலர் உள்ளனர்.
வாக்காளர் என்பதில் பெருமை கொள்வேன் வாக்களிக்க தயார் என்பேன், நமது வாக்கினை சரியாக பயன்படுத்தினால் எதிர்காலம் ஏற்றம் போன்ற வாசகங்களை ஏந்தி பேரணி நடைபெற்றது.
பேரணியில் ஜி டி என் கலை கல்லூரி மாணவ மாணவியர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment