நத்தத்தம் அருள்மிகு கைலாசநாதர் சமேத செண்பகவல்லி திருக்கோவிலில் தை மாத பிரதோஷம் வழிபாடு. - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 24 January 2024

நத்தத்தம் அருள்மிகு கைலாசநாதர் சமேத செண்பகவல்லி திருக்கோவிலில் தை மாத பிரதோஷம் வழிபாடு.


திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டி அருள்மிகு கைலாசநாதர் சமேத செண்பகவல்லி திருக்கோவிலில் தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு, அங்குள்ள நந்தி சிலைக்கு பால் இளநீர் சந்தனம் ஜவ்வாது மஞ்சள் தேன் போன்ற 16 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மூலவர் கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

இதில், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். இதே போல, மதுரை மாவட்டம், சோழவந்தான் விசாக நட்சத்திர கோயிலான, பிரளய நாதர் சிவன் ஆலயத்தில், பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவை ஒட்டி, இக்கோயில் அமைந்துள்ள நரசிம்மர், சனீஸ்வரலிங்கம், நந்திகேஸ்வரன், மற்றும் காசி லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி கோயில் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


இந்த நிகழ்ச்சியில், தொழில் அதிபர் எம்.வி. எம். மணி, கோயில் செயல் அலுவலர் இளமதி, கவுன்சிலர் வள்ளி மயில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதே போல, தென்கரை மூலநாதர் சுவாமி ஆலயத்திலும், திருவேடகம் சுவாமி ஆலயத்திலும் ,மதுரை அண்ணா நகர் யானைக் குழாய் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்திலும், சித்தி விநாயகர் ஆலயத்திலும், சர்வேஸ்வர ஆலயத்திலும் பிரதோஷ விழா நடைபெற்றது. கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad