மாட்டுப் பொங்கலை முன்னிட்டு திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கோபிநாதர் சுவாமி அமைந்துள்ள சுவாமிக்கு பல ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 16 January 2024

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கோபிநாதர் சுவாமி அமைந்துள்ள சுவாமிக்கு பல ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் நடைபெற்றது.

 


மாட்டுப் பொங்கலை முன்னிட்டு திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கோபிநாதர் சுவாமி அமைந்துள்ள சுவாமிக்கு  பல ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் நடைபெற்றது.



திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் அருகே மாட்டு பொங்கலை முன்னிட்டு கோபிநாத சுவாமிக்குப் சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்றது.



திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா உட்பட்ட ரெட்டியார்சத்திரம் காமாட்சிபுரம் கிராமத்தில் 450 அடி உயரத்தில் திருகோணமலையில் கோபிநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்குக் கிருஷ்ணர் உருவத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.



இந்தக் கோவிலில் மாட்டுப்பொங்கல் நாளான இன்று திண்டுக்கல் மாவட்ட பகுதியில் சுற்றி உள்ள ஒட்டன்சத்திரம் பழனி போன்ற பகுதிகளில் இருந்தும் கோயம்புத்தூர் பொள்ளாச்சி தேனி மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் மேலும் ரெட்டியார்சத்திரம் ஊராட்சியில் உள்ள பகுதி மக்கள் கோபிநாதசுவாமிக்கு தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் வீட்டு விலங்குகளான ஆடு மாடு போன்ற கோழி செல்லப் பிராணிகள் ஆரோக்கியத்துடன் இருக்கவும், நோய் நொடிகள் அண்டாமல் இருக்கவும் தங்கள் தொழில் பெருகவும் கோபிநாத சுவாமிக்குத் தங்கள் வீடுகளில் வளர்க்க கூடிய மாடுகளில் கரந்து கொண்டுவரப்பட்ட பால் மூலம் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.



மேலும் கோயில் வளாகத்தில் நேர்த்தி கடன் செலுத்துவதற்காக விற்கக்கூடிய ஆடு மாடு கோழி போன்ற மண் உருவிலான பொம்மைகளை வாங்கி வைத்து நேர்த்தி கடனைச் செலுத்தினர்.



இன்று திண்டுக்கல் மாவட்டம் இல்லாமல் மற்ற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பல ஆயிரம் லிட்டருக்கும் மேலாகச் சுவாமிக்குப் பாலாபிஷேகம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவல் குழுவினர் செய்திருந்தனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad