அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நல்லாம்பட்டி பகுதியில் காளியம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜை
திண்டுக்கல் அடியனூத்து ஊராட்சி நல்லாம்பட்டி பகுதியில் ஊர் நாட்டாமை, ஊர் பூசாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக அருள்மிகு காளியம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.மேலும் வெடி வெடித்து கொண்டாடினர். இதனை அடுத்து பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பாஜக(obc) ஒன்றிய தலைவர் மணிகண்டன், தொழில்துறை பிரிவு தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment