திண்டுக்கல் இரயில் நிலையத்தில் 3 லட்சம் பணம், 3 1/2 பவுன் தங்க நகை, 2 செல்போன் உள்ளிட்ட பொருட்களை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு பொதுமக்கள் பாராட்டு
திண்டுக்கல் இரயில் நிலையத்தில் இரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில் சார்பு ஆய்வாளர் அருணோதயம், தனிப்பிரிவு காவலர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது நடைமேடையில் அனாதையாக கிடந்த பேக்கை சோதனை மேற்கொண்ட போது அதில் ரூ.3 லட்சம் பணம், 3 1/2 பவுன் தங்க நகை, 2 செல்போன்கள் உள்ளிட்ட பொருட்கள் இருப்பதை கண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு பேக்கின் உரிமையாளர் மதுரையை சேர்ந்த நபரை நேரில் வரவழைத்து பணம், நகை செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை ஒப்படைத்தனர். இதனைக் கண்ட பொதுமக்கள் இரயில்வே காவல்துறையினரை வெகுவாக பாராட்டினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment