பாப்பம்பட்டி குப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மூன்று வகுப்பறைகள் சமையலறை கட்டிடத்தை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் திறந்து வைத்தார்
திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியம் பாப்பம்பட்டி குப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.49.80 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக மூன்று வகுப்பறைகள் மற்றும் பள்ளி சமையலறை கட்டிடத்தை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் திறந்து வைத்து பார்வையிட்டார்.
உடன் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி, ஒன்றிய பெருந்தலைவர் ஈஸ்வரி கருப்புசாமி, பள்ளி தலைமையாசிரியர், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரபாகரன், துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment