வத்தலகுண்டு அருகே இருசக்கர வாகனத்தை திருட முயன்ற பிரபல திண்டுக்கல் திருடன் கைது
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவரின் இரு சக்கர வாகனத்தை திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த இப்ராம்ஷா என்பவர் திருட முயன்ற போது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்க்கும்போது இப்ராம்ஷா தப்பி ஓட முயற்சித்த போது கல் தடுக்கி கீழே விழுந்து காயம் ஏற்பட்டது. பொதுமக்கள் இப்ராம்ஷாவை பிடித்து வத்தலகுண்டு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வத்தலகுண்டு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்ராம்ஷா மீது 10 மேற்பட்ட வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment