கொடைக்கானலில் நாளை மின்தடை வத்தலக்குண்டு பகிர்மான செயற்பொறியாளர் அறிவிப்பு
வருகின்ற 23.01.2024 செவ்வாய்கிழமை அன்று கொடைக்கானல் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கொடைக்கானல் துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் வழங்கும் பகுதிகளான கொடைக்கானல், பூம்பாறை மன்னவனூர். கவுஞ்சி, பூண்டி, கிளாவரை,கூக்கால், பழம்புத்தூர். குண்டுப்பட்டி, கோம்பைக்காடு, வில்பட்டி, பெருமாள்மலை, B.L.செட், ஊத்து, பண்ணைக்காடு, தாண்டிக்கு மங்களம்கொப்பு, குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி, பெரியூர், பாச்சலூர், கடைசிக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்ற விபரத்தினை வானொலி நிலையத்திலிருந்து ஒலிப்பரப்பப்படும் சேவை செய்திகளில், நாளிதழ்களில் பொது மக்களுக்கு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக வத்தலக்குண்டு பகிர்மான செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment