பழநி தைப்பூச திருவிழா பாதுகாப்பு பணிக்கு 3 ஆயிரம் போலீசார்
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தென்மண்டல ஐ.ஜி.நரேந்திரன் நாயர் வழிகாட்டுதலில் 1 DIG, 3 எஸ்.பி-கள், 30 டி.எஸ்.பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் தவிர, வெடிகுண்டு நிபுணர் குழு, மோப்பநாய் குழு, போக்குவரத்து போலீசார், பட்டாலியன் போலீசார், ஆயுதப்படை போலீசார் என சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் பழநி நகர், அடிவாரம், சண்முகநதி மற்றும் இடும்பன் குளம் பகுதிகளில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட உள்ளது.பக்தர்கள் கூட்டம் அதிகமுள்ள கிரிவீதி, அடிவாரம், சுற்றுலா பேருந்து நிலையம், யானைப்பாதை, படிவழிப்பாதை, மலைக்கோயில் பகுதிகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட உள்ளன என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment