கொடைக்கானலில் வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்க வயல்களுக்கு சேலைகளால் வேலி அமைத்த விவசாயிகள்
கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பண்ணைக்காடு, தாண்டிக்குடி, பூலத்தூர், மங்களம்கொம்பு, பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி, பெரியூர், ஆடலூர், பாச்சலூர், பன்றிமலை, சோலைக்காடு உள்ளிட்ட மலைக்கிராமங்களில் காட்டெருமை, காட்டுப்பன்றி, யானை உள்ளிட்ட வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்றுவதற்காக சேலைகளால் வேலி அமைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே வண்ணத்தில் சேலைகளை கட்டாமல் பல்வேறு நிறங்களில் வயல்களுக்கு சேலையால் வேலி அமைத்துள்ளனர். இரவு நேரங்களில் இதை பார்க்கும் போது கண்ணை கூசும் வகையில் இருக்கும் என்பதால் விலங்குகள் அதன் அருகே வருவதற்கு தயக்கம் காட்டி வேறு இடத்துக்கு சென்று விடும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment