அனைத்து நியாய விலைக் கடைகளிலும் உரிய எடையில் பொருட்களை அனுப்ப ஓபிஎஸ் வலியுறுத்தல்:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் உரிய அளவில் பொருட்களை அனுப்ப வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து அனுப்பும் அரிசி,சர்க்கரை, மூடைகளில் இருந்து 5.4 கிலோ எடை குறைவதாக புகார்கள் வருகின்றன. அதிமுக ஆட்சியில் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படவில்லை மேலும் அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment