திண்டுக்கலில் சத்துணவு ஊழியர் மர்ம நபர்களால் அடித்துக் கொலை:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காமராஜர் நகரில் வாடகை வீட்டில் வசித்து வரும் அரசு பள்ளி சத்துணவு ஊழியர் நாகராணி (55) என்பவர் அவரது வீட்டின் பின்புறம் மர்மமான முறையில் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார் இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேடசந்தூர் போலீசார் இறந்து கிடந்த நாகராணியின் உடலை கைப்பற்றி கொலைக்கான காரணம் மற்றும் கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யார் என்றுதீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர்பீர்மைதீன்...
No comments:
Post a Comment