திண்டுக்கல்லில் தனியாக சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 31 January 2024

திண்டுக்கல்லில் தனியாக சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு:


 திண்டுக்கல்லில்  தனியாக சென்ற பெண்ணிடம்  நகை பறிப்பு:திண்டுக்கல் எம்.வி.எம் நகரை சேர்ந்த ராஜநிலா. இவர் நேற்று இரவு திண்டுக்கல் - திருச்சி பைபாஸ் ரோடு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் எதிரே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அப்பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட மர்ம நபர்கள் ராஜநிலா கழுத்தில் அணிந்திருந்த  7 1/2 பவுன் தாலி செயினை பறித்து சென்றனர். இதை சற்றும் எதிர்பாத ராஜநிலா செய்வதறியாது பயந்தவாரே அப்பகுதியில் பைக்கின்  பின்னே  கூச்சலிட்டுக் கொண்டு அவர்களை பின் தொடர்ந்து ஓடியுள்ளார் ஆனால் அந்த மர்ம கும்பல் பைக்கில் வேகமாக சென்று தப்பித்துள்ளனர் இதுகுறித்து தாடிக்கொம்பு காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார் ராஜ நிலா புகாரை பெற்றுக் கொண்ட தாடிக்கொம்பு காவல் துறையினர் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர். பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad