திண்டுக்கல்லில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சுரபி ஜோதிமுருகனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை,75 ஆயிரம் அபராதம்
திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு பாலியல் வழக்கில் சுரபி ஜோதி முருகன்(50), அர்ச்சனா(26) ஆகிய 2 பேரை தாடிக்கொம்பு போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் ஆய்வாளர் விக்டோரியா லூர்து மேரி தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் மைதிலி ஆகியோரின் சீரிய முயற்சியால் இன்று சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி அவர்கள் சுரபி ஜோதி முருகனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.75,000 அபராதம் விதித்தும், அர்ச்சனாவிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25,000 அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment