பழநி தைப்பூச திருவிழா பாதுகாப்பு பணிக்கு 3 ஆயிரம் போலீசார்
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தைப்பூசம் திருவிழா வரும் 19ம் தேதி துவங்குகிறது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் எஸ்.பி பிரதீப் அவர்கள் வழிகாட்டுதலின்படி 10 டி.எஸ்.பிக்கள், 30 இன்ஸ்பெக்டர்கள், 140 சப்.இன்ஸ்பெக்டர்கள், 300 ஊர்க்காவல்படையினர் தென் மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட உள்ளனர்.தவிர, வெடிகுண்டு நிபுணர் குழு, மோப்பநாய் குழு, போக்குவரத்து போலீசார், பட்டாலியன் போலீசார், ஆயுதப்படை போலீசார் என சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment