ஜனவரி 29 இந்திய செய்தித்தாள் தினம் இன்று:
ஆண்டுதோறும் ஜனவரி 29ஆம் தேதி இந்திய செய்தித்தாள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் முதன்முதலாக ஹிக்கீ’ஸ் பெங்கால் கெஜெட் (Hicky Bengal Gazette) என்கிற வார இதழ் வெளிவந்தது. இதனை ஆங்கிலேயரான ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கீ (James Augustus Hickey) என்பவர் 1780ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி வெளியிட்டார்.
இப்பத்திரிகை கொல்கத்தாவிலிருந்து வெளிவந்தது. அரசியல் மற்றும் வர்த்தக ரீதியான இதழாக வெளிவந்தது. அப்போது நடந்த போர் செய்திகளை பத்திரிகையில் வெளியிட்டார்இந்தியாவில் வெளிவந்த முதல் வார இதழ் என்பதால் அத்தினத்தை இந்திய செய்தித்தாள் தினமாக கொண்டாடப்படுகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர்பீர்மைதீன்...
No comments:
Post a Comment