கோழிகளை தாக்கும் வெள்ளைக்கழிச்சல் நோய்க்கான தடுப்பூசி முகாம்கள் நாளை முதல் வரும் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி அறிவிப்பு
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு இலவசமாக காலத்திற்கு ஏற்றவாறு முகாம்கள் நடத்தி தடுப்பூசி பணியை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் கோடைகாலத்திற்கு முன்னர் பிப்ரவரி மாதத்தில் கோழியினங்களில் ஏற்படும் வெள்ளைக்கழிச்சல் நோயினை தடுப்பதற்காக தடுப்பூசி போடும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கோழிகளை தாக்கும் வெள்ளைக்கழிச்சல் நோய்க்கான தடுப்பூசி முகாம்கள் 01.02.2024 முதல் 14.02.2024 வரை 14 நாட்கள் நடைபெறவுள்ளது. கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் கோழி வளர்க்கும் விவசாயிகள் 8 வார வயதிற்கு மேல் உள்ள கோழிகள் மற்றும் குஞ்சுகளுக்கு இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவ நிலையங்களிலும் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களிலும் இத்தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறவுள்ளது. வருடத்திற்கு இருமுறை இத்தடுப்பூசி செலுத்தி வந்தால் இந்நோயை முற்றிலும் அகற்றி விடலாம்.
எனவே சிறப்பு இலவச கோழிகளுக்கான வெள்ளைக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்களில் பங்கேற்று கோழிகளுக்கு தடுப்பூசியினை செலுத்தி, கோழிகளை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பூங்கொடி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment