திண்டுக்கல் அருகே நீதிமன்ற ஊழியர் அறிவாளால் வெட்டியதில் உசிலம்பட்டியை சேர்ந்தவர் படுகாயம்
திண்டுக்கல்லை அடுத்த சென்னமநாயக்கன்பட்டியில் குடிபோதையால் ஏற்பட்ட தகராறு காரணமாக சென்னமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த ராசுதேவர் மகன் சிவக்குமார்(48) என்பவர் உசிலம்பட்டியை சேர்ந்த வீரண்ணன் தேவர் மகன் சுரேஷ்குமார்(46) என்பவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்.
இதனால் படுகாயம் அடைந்த சுரேஷ்குமார் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தாடிக்கொம்பு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் சிவகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவக்குமார் பழனி நீதிமன்றத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment